8th Tamil unit 8.5 – மயாப்பு இலக்கணம் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 8th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 8th New Tamil Book Back Answers Unit 8.5 – யாப்பு இலக்கணம் Tamil Book Back Solutions/Answers are available for English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Books Back One and Two Mark Questions and Answers available in PDF. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:
8th Samacheer Kalvi Book – unit 8.5 யாப்பு இலக்கணம் Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
8th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 8.5 – யாப்பு இலக்கணம்
1. எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.
Answer:
எழுத்து இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :
யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :
2. வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:
வெண்பாக்களால் அமைந்த நூல்கள் :
1. திருக்குறள்
2. நாலடியார்
3. முத்தொள்ளாயிரம்
4. நளவெண்பா
5. நீதிவெண்பா
6. மூதுரை
7. நல்வழி
8. நான்மணிக்கடிகை
9. இனியவை நாற்பத
10. இன்னா நாற்பது
11. திரிகடுகம்
12. ஆசாரக்கோவை
13. பழமொழி
14. சிறுபஞ்சமூலம்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அசை ………………. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer: அ) இரண்டு
2. விடும் என்பது ……………… சீர்.
அ) நேரசை
ஆ) நிரையசை
இ) மூவசை
ஈ) நாலசை
Answer: ஆ) நிரையசை
3. அடி ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) எட்டு
ஈ) ஐந்து
Answer: ஈ) ஐந்து
4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ………………
அ) எதுகை
ஆ) இயைபு
இ) அந்தாதி
ஈ) மோனை
Answer: ஈ) மோனை
பொருத்துக விடைகள்
1. வெண்பா – துள்ளல் ஓசை
2. ஆசிரியப்பா – செப்பலோசை
3. கலிப்பா – தூங்கலோசை
4. வஞ்சிப்பா – அகவலோசை
Answer:
1. வெண்பா – செப்பலோசை
2. ஆசிரியப்பா – அகவலோசை
3. கலிப்பா – துள்ளல் ஓசை
4. வஞ்சிப்பா – தூங்கலோசை
சிறுவினா
1. இருவகை அசைகளையும் விளக்குக.
Answer:
இருவகை அசைல் – அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
(i) நேரசை : குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். க, கல், கா, கால்.
(ii) நிரையசை : இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். எ.கா. பல, பலர், சிவா, சவால்.
2. தளை என்பது யாது?
Answer:
சீர்கள் ஒன்றோடு ஒன்றி பொருந்துவது தளை எனப்படும். முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில் தளைகள் ஏழு வகைப்படும்.
3. அந்தாதி என்றால் என்ன?
Answer:
ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதி ஆகும்.
4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பா நான்கு வகைப்படும்: அவை
(i) வெண்பா
(ii) ஆசிரியப்பா
(iii) கலிப்பா
(iv) வஞ்சிப்பா
மொழியை ஆள்வோம்
கேட்க
1. அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
மக்கள் பணியே மகத்தான பணி!
அவையோர்க்கு வணக்கம் ! நான் மக்கள் பணியே மகத்தான பணி என்னும் தலைப்பில் பேச வந்துள்ளேன்.
தன்னையொத்த ஒரு மனிதன் பசித்திருக்கும் போது கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக ஒருவர் அளித்தால், அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன் தருவதில்லை. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த ஒரு மனிதனுக்கு ஒன்று கொடுத்தால், அது இறைவனுக்கும் சென்று சேரும் என்று திருமூலர் ‘படமாடக் கோயில் என்ற பாடல் மூலம் கூறுவதே இத்தலைப்பிற்குப் பொருத்தமாகும்.
இறைவன் எப்போதும் தன் அடியவர்களிடத்தில் இது வேண்டும் அது வேண்டும் என்று எப்போதும் கேட்பதில்லை. ஆனால் சில பெருஞ்செல்வந்தர்கள், சில தொழிலதிபர்கள் தங்கள் அலுவலகத்திலோ தொழிற்சாலைகளிலோ பணிபுரிபவர்களுக்குப் போதுமான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை.
அவசரத் தேவைக்கு என்று கேட்பவருக்கு கடனாகக்கூட கொடுத்து உதவமாட்டார்கள். இ ஆனால் கோவில் உண்டியலிலும் பூசாரியின் தட்டிலும் பணத்தைத் தாராளமாகக் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய செல்வாக்கை காட்டுகின்றனர்.
இதனால் கடவுள் மகிழ்வாரா என்று கேட்டால் நிச்சயமாக மகிழமாட்டார். இறைவனை வழிபடுவதற்கு இந்த ஆடம்பரம் தேவையில்லை. பூ வைத்து இறைவனைத் தூய மனத்தோடு வழிபட்டாலே, இறையருள் கிட்டும். இதனை ஒவ்வொரு செல்வந்தரும் உணர வேண்டும்.
இறைவன் ஐம்பூதங்களை உருவாக்கியவர் மற்றும் அந்த ஐம்பூதங்களாகவும் விளங்குபவர் அப்படிப்பட்ட இறைவனுக்குச் செய்யும் பூசைகளை ஆடம்பரப்படுத்தாமல் – அல்லது விளம்பரப்படுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு ஆகும் செலவினை , ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். அதனால் இறைவனை மகிழ்விக்கலாம்.
“எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல், பணம், புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும் போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான்” என்று விவேகானந்தர் கூறுகிறார்.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்பது போல உலக உயிர்கள் அனைத்திலும் இருக்கிறார். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சிறு உதவியைச் செய்தாலும் அவர்கள் மகிழ்வர். அந்த மகிழ்ச்சி இறைவனைப் போய்ச் சேரும்.
தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் நம் வாழ்வின் தவம் என்று உணர வேண்டும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பதே சிறந்த அறம் என எண்ணி வாழ வேண்டும். இவற்றையுணர்ந்து நாம் ஏழை எளியோருக்கு உதவி செய்து அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
நன்றி!
சொல்லக் கேட்டு எழுதுக
ஒரு நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும். அவன் அறம் அல்லாதவற்றை நீக்கி, அறத்தை நிலைநிறுத்த வேண்டும். தான் குற்றம் செய்யுமிடத்து நாணி, தன் தகுதியை நிலைநிறுத்த வேண்டும்.
குற்றம் கண்டவிடத்துத் தானே நேரில் சென்று ஆராய்ந்து, நெறிமுறை தவறாது நீதி வழங்குதல் வேண்டும். இவ்வாறு விளங்கும் தலைவனை மக்கள், துன்பம் போக்கும் இறை என்றும், இருளை அகற்றும் ஒளி என்றும் கொண்டாடுவர் என்று அயோத்திதாசர் கூறுகிறார்.
இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.
1. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.
Answer:
மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.
2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.
Answer:
எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.
3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
Answer:
திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
4. அறநெறிகளைக்கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.
Answer:
அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும்.
5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.
Answer:
குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
அறிந்து பயன்படுத்துவோம்
பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா வாகனப் பயணம்
சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
சாலைச்சந்திப்பில் நுழையும் போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
வினாக்கள்
1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?
Answer:
சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?
Answer:
தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகிய வாகனங்களுக்குக் கண்டிப்பாக . வழிவிட வேண்டும்.
3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
Answer:
சாலைச் சந்திப்புகளில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும்.
4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?
Answer:
மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.
Answer:
(i) ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
(ii) சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகிய இடங்களில் வேகத்தைக் குறைத்து அங்கு இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
(iii) எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அறத்தால் வருவதே இன்பம்
கடிதம் எழுதுக.
புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
25, பிள்ளையார் கோயில் தெரு,
செங்கல்பட்டு ,
20-11-2020
அன்புள்ள மாமாவுக்கு ,
செழியன் எழுதும் கடிதம், நான் இங்கு நலமாக இருக்கிறேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் அண்ணன் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு நீங்களும் அத்தையும் நலமாக இருக்கிறீர்களா?
நீங்கள் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கு நான்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. பொதுக்கட்டுரை புத்தகம், திருக்குறள் புத்தகம் (எளிமையான உரையுடன்), ஐம்பெருங்காப்பியங்கள் (கதைச் சுருக்கம்) கணினி தொடர்பான ஒரு புத்தகம் ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
செழியன்
உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
திரு. கா.மாறன்,
எண்.65, சன்னதி தெரு,
கும்பகோணம்.
மொழியோடு விளையாடு
படத்தைப் பார்த்து எழுதுக.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. அறக்கருத்துகளைப் படித்து, வாழ்வில் பின்பற்றுவேன்.
2. அறவாழ்வு வாழ்ந்த சான்றோர்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. தொண்டு – Charity
2. ஞானி – Saint
3. தத்துவம் – Philosophy
4. நேர்மை – Integrity
5. பகுத்தறிவு – Rational
6. சீர்திருத்தம் – Reform
Other Important links for 8th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 8th Tamil Book Back Answers – 8th Tamil Book Back Answers