Samacheer Kalvi 9th Science Unit 1 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 1 – அளவீடு Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 1 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 01: அளவீடு Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 01 – அளவீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
இ) கி.மீ< மீ< செ.மீ < மி.மீ
ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
அ) நிறை
ஆ) எடை
இ) காலம்
ஈ) நீளம்
3. ஒரு மெட்ரிக் டன் என்பது
அ) 100 குவின்டால்
ஆ) 10 குவின்டால்
இ) 1/10 குவின்டால்
ஈ) 1/100 குவின்டால்
4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
அ) சுருள் தராசு
ஆ) பொதுத் தராசு
இ) இயற்பியல் தராசு
ஈ) எண்ணியல் தராசு
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. ____________ ன் அலகு மீட்டர் ஆகும்.
2. 1 கி.கி அரிசியினை அளவிட __________ தராசு பயன்படுகிறது.
3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ____________ கருவியாகும்.
4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ________ பயன்படுகிறது
5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை __ ஆகும்.
விடை:
- நீளம்
- பொதுத்
- வெர்னியர் அளவி
- திருகு அளவி
- 10 மில்லி கிராம்
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.
விடை:
தவறு – மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்
2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை.
விடை:
தவறு – மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப்
பயன்படுத்துகிறோம்.
விடை: சரி
4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.
விடை: சரி
5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K
விடை: சரி
6. வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மிமீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.
விடை: சரி
IV. பொருத்துக.
- இயற்பியல் அளவு SI அலகு
அ) நீளம் a) கெல்வின்
ஆ) நிறை b) மீட்டர்
இ) காலம் c) கிலோகிராம்
ஈ) வெப்பநிலை d) விநாடி - கருவி அளவிடப்படும் பொருள்
அ) திருகு அளவி a) காய்கறிகள்
ஆ) வெர்னியர் அளவி b) நாணயம்
இ) சாதாரணத்தராசு c) தங்க நகைகள்
ஈ) மின்னணுத்தராசு d) கிரிக்கெட் பந்து
விடை:
- அ – b; ஆ – c; இ – d; ஈ – a
- அ – b; ஆ – d; இ – a; ஈ – c
V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.
பின்வருமாறு விடையளி.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.
இ) A சரி ஆனால் R தவறு.
ஈ) A தவறு ஆனால் R சரி.
1. கூற்று (A): ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற
வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம். கூற்று
2. கூற்று (A): 00 C = 273.16 K. நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.
காரணம் (R): செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும்போது 273 ஐக் கூட்டினால் போதுமானது.
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
3. கூற்று (A): இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
காரணம் (R): ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி
ஆண்டு எனப்படும்.
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
VI. மிகச்சுருக்கமாக விடையளிக்க.
1. அளவீடு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் பண்பு அல்லது நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கும் முறை.
2. SI அலகு-வரையறு.
விடை:
- SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளைவிட நவீன மயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை.
- உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.
3. SI அலகின் விரிவாக்கம் என்ன?
விடை:
International system of units. (பன்னாட்டு அலகு முறை)
4. மீச்சிற்றளவு – வரையறு.
விடை:
ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு.
5. திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்.
விடை:
திருகு அளவியில், திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல்.
6. 2 மீட்டர் நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
விடை:
- முடியாது. அளவுகோலால் கம்பியின் விட்டத்தை கண்டறிய முடியாது.
- கம்பியின் விட்டத்தை திருகு அளவி கொண்டு கண்டறிய முடியும்
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil