9th Social Science History Unit 6 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 History Unit 6 – இடைக்காலம் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science History Book Portion consists of 11 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th History Unit 6 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check History questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.
அலகு 6: இடைக்காலம் Book Back Answers in Tamil
History(வரலாறு) – அலகு 06
இடைக்காலம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. _______ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
அ) ஷின்டோ
ஆ) கன்பியூசியானிசம்
இ தாவோயிசம்
ஈ) அனிமிசம்
விடை: அ) ஷின்டோ
2. _______ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ்
ஆ) சோகன்
இ பியுஜிவாரா
ஈ) தொகுகவா
விடை: அ) டய்ம்யாஸ்
3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
அ) தாரிக்
ஆ) அலாரிக்
இ சலாடின்
ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
விடை: அ) தாரிக்
4. ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்
அ) அப்பாசித்து வம்சம்
ஆ) உமையது வம்சம்
இ சசானிய வம்சம்
இ மங்கோலிய வம்சம்
விடை: அ) அப்பாசித்து வம்சம்
5. நிலப்பிரபுத்துவம் _____ மையமாகக் கொண்டது.
அ) அண்டியிருத்தலை
ஆ) அடிமைத்தனத்தை
இ வேளாண் கொத்தடிமையை
ஈ) நிலத்தை
விடை: அ) அண்டியிருத்தலை
II. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. _____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்.
விடை: அய்னஸ்
2. _____ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை: யமட்டோ
3. ______ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை: மதினாட்-உன்-நபி
4. வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ____ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.
விடை: நாடோடிப் பழங்குடியினர்
5. உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _____ ஆவார்.
விடை: இரண்டாம் முகமது.
III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
1. i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்
iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன
iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரியானவை
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
2. i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.
ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.
iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ
iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை
ஈ) (iv) சரி
விடை: இ) (ii) மற்றும் (iv) சரியானவை
3. i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
4. கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
அ) கூற்று சரி ; காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ கூற்றும் காரணமும் சரியானவை
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது
விடை: அ) கூற்று சரி ; காரணம் தவறு
5. கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது
காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை: ஈ) கூற்று சரி ; காரணம் சரியான விளக்கம்
IV. பொருத்துக:
1. சிகப்பு தலைப்பாகைகள் -அ) காமகுரா
2. செல்ஜுக் துருக்கியர்கள் – இரண்டாம் முகமது
3. முதல் சோகுனேட் -ஆ) அரேபிய இரவுகளின் நகரம்
4. பாக்தாத் -ஈ) சூ யுவான் சங்
5. கான்ஸ்டாண்டிநோபிள்கைப்பற்றப்படல் -உ) மத்திய ஆசியா
விடை: 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஆ
V. சுருக்கமான விடையளி:
1. சீனப் பெருஞ்சுவர்
விடை:
சீனப் பெருஞ்சுவர்:
- தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கி.மு. 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் சுவர்களை எழுப்பிக் கொண்டன.
- கிழக்கிலிருந்து மேற்காக, சின் அரசவம்சத்தின்காலத்தில் தனித்தனியாக இருந்த சுவர்கள் இணைக்கப்பட்டு சுமார் 5000 கி.மீ. நீளமுடைய உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெருஞ்சுவர் உருவானது. வலுவூட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.
2. சிலுவைப் போர்களின் தாக்கம்.
விடை:
சிலுவைப்போர்களின் தாக்கம் :
- நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.
- கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக உருவெடுத்தன. கிழக்கும் மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
- இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெற்றது. போப்பின் ஆட்சிமுறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.
3. இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? நிலப்பிரபுத்துவ முறை அண்டியிருத்தலை மையமாகக் கொண்டது.
விடை:
- அரசர் – கவுளின் பிரதிநிதி. நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். நிலங்களைப் பிரித்து நிலப்பிரபுகளுக்கு கொடுத்தார்.
- நிலப்பிரபுக்கள் – கோமகன்களாகக் கருதப்பட்ட டியூக்குகள் ‘கவுண்ட்டுகள், ‘யேல்’கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களைப் பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர். அரசவை அண்டியிருந்தோர்.
- வைஸ் கவுண்ட் – நிலப்பிரபுக்களிடம் பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தோர். நைட் (சிறப்புப்பணி வீரர்கள்) – தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்து தர முடியாது. பிரபுக்களை அண்டியிருந்தோர்.
- பண்ணை அடிமைகள் – அனைவருக்கும் கீழ் அடி மட்டத்தில் இருந்தவர்கள். இவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என அறியப்பட்டனர்.
4. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
விடை:
- திருச்சபையிலிருந்து விலக்கம்: தகுதியான கிறிஸ்தவனுக்குறிய உரிமைகள் மறுக்கப்படுதல். திருச்சபைக்குள் புனித சடங்குகளை நிறைவேற்ற முடியாது. இறந்தபின் உடலை திருச்சபைக் கல்லறையில் புதைக்க முடியாது.
- மத விலக்கம்: ஓர் அரச குடிமகனுக்கு தகுதியான சமயம் சார்ந்த பயன்களை மறுத்தல். அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.
VI. விரிவான விடையளி:
1. சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
விடை:
- தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ வெற்றி பெற்றார்.
- கி.பி.(பொ.ஆ) 1192 இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய் சோகன் என்ற பட்டம் சூட்டினார்.
- காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரான போது சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
- யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினார். இது, முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
- வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.
- நிலப்பிரபுத்துவ ராணுவத் தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப் பட்டது.
- ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
- கி.பி.(பொ.ஆ) 1338-ல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. அதன்பின், அஷிக்காகா சோகுனேட்க் ஆட்சியைக் கைப்பற்றினர்.
- இக்காலக்கட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
- இறுதியில் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் மற்றும் தொகுகவா இய்யாசு ஆகியோர் ஜப்பானை உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.
2. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
விடை:
மங்கோலியர் ஆட்சி :
- வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியை நிறுவினர். பாரசீகத்தையும், ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் கைப்பற்றி கி,பி, 1252-இல் மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
- யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது. பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
- விவசாயிகள் வறுமையில் வாடினர். மதம் சார்ந்த அமைப்புகளம், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
- சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சங் கி.பி. 1369-ல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
Other Important links for 9th Social Science Book Back Solutions:
Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers