10th Tamil Unit 8.2 – ஞானம் Book Back Answers:
Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் 8.2 – ஞானம் Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 8.2 Answers below:
We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 8 Book Back Questions with Answer PDF:
For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide
10th Tamil Book Back Answers Unit 8.2 – ஞானம் Solution PDF:
Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Gui6de questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF
Chapter 8.2 – ஞானம்
கற்பவை கற்றபின்
1.“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
விடை:
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன.
நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.
அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.
2.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.
விடை:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:
- அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை
- அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
- அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
- அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.
- அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்
- அன்புடைமை – அன்பின் மகத்துவம்
- இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
- இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
- இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
- ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
- ஊழ் – விதி வலிமை
- ஒப்புரவறிதல் – கொடுத்தல்
- ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்
- கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
- கள்ளாமை – மது அருந்துதல் கூடாது
- கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்
- கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.
- செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
- தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை
- தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
- துறவு – உலகப் பற்றை நீக்குதல்
- நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
- நிலையாமை – எதுவும் நிலையன்று
- நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
- பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்
- பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
- புகழ் – சிறப்பு
- புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
- புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை
- பொறையுடைமை – பொறுமை
- மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்
- மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
- வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
- வாய்மை – உண்மையின் மேன்மை
- வான்சிறப்பு – மழையின் சிறப்பு
- விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்
- வெகுளாமை – சினம் கொள்ளாமை
- வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
விடை:
இ) இடையறாது அறப்பணி செய்தலை
குறுவினா
1.காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
விடை:
- காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
- வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
- வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.
சிறுவினா
1.‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
விடை:
உரைக்குறிப்புகள்:
- அறம் என்பதன் விளக்கம் தரல்.
- சுற்றுச்சூழல் என்றால் என்ன?
- சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
- அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
- சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
- நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
- இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.
2.வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
விடை:
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.
Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:
Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers
Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF