10th Tamil Unit 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே… Book Back Answers:
Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் Unit 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே… Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 7.5 Answers below:
We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 7 Book Back Questions with Answer PDF:
For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide
10th Tamil Book Back Answers Unit 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே… Solution PDF:
Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF
Chapter 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே…
கற்பவை கற்றபின்
1.உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
விடை:
கடின உழைப்பாளர்
(மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்)
எங்கள் ஊரில் விமலா என்றொரு பெண்மணி இருந்தார். மாலையில் பூ விற்பார், வீட்டு வேலை செய்வார். அவர் கல்வியாளரோ, எழுத்தாளரோ, போராட்டக்காரரோ அல்லர். கடின உழைப்பாளர்.
எவ்வாறெனில், திருமணமான நாள் முதல் கணவரால் பல இன்னல்களைத் துன்பங்களை அனுபவித்ததோடு, இளம் வயதிலேயே விதவையுமாகி சமூக அவலத்துக்கும், உள்ளானார்.
துன்பங்களைப் பெற்ற அவர் துன்பம் துடைத்தூன்றும் தூணாக மாறினார். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டார். உழைப்பையே உயிர் மூச்சாய் மாற்றினார். வீட்டு வேலை முதல் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து. தன் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்தார்.
ஒரு குழந்தையை மருத்துவராகவும் மற்றொரு குழந்தையைப் பொறியாளராகவும் மாற்றிய விமலா உழைப்பின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.
சிறப்புமிக்கவர்
(நர்த்தகி நடராஜ்)
மதுரை மாநகரில் பிறந்து, உலகின் பல்வேறு பகுதிக்குச் சென்று தன் கலையை நடத்தி சிறப்பு செய்தவர் நர்த்தகி நடராஜ்.
இவர் யார் என்றால் நமக்கும் நம் எண்ணங்கள் எல்லாம் சிதறும். இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, தன் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே குருகுலமுறையில் பரதக் கலையை கற்றவர்.
தன் ஆசிரியரால் நர்த்தகி என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆண்டுகளாக தன் பரதக் கலையை உலக அரங்கில் நடத்தி 2019-ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. மனித இனத்தில் மற்றவரால் தாம் வெறுக்கப்பட்டாலும் தன்னையும், தமிழரின் பரதக்கலையையும் உலகிற்குக் கொண்டு சென்ற சிறப்புமிக்கவர் நர்த்தகி நடராஜ்
போற்றத்தக்கவர்
(சாலை ஓரம் உணவகம் நடத்துபவர்)
கோவை பேரூர் பகுதியில் வசிக்கும், பாட்டி பெயர் சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இட்லியால் புகழ் பெற்றவர். இன்றும் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லி விற்பவர்.
நல்ல சுவையான சட்னியோடு 80 வயதிலும் இலாபத்தை நோக்காமல் பலரின் பசியாற்றியவர். அவர் தேவையை ஆட்சியர் கேட்டாலும் எதுவும் வேண்டாம் என்பார்.
ஆட்சியர் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடும், அரசு அவரை கௌரவித்தும் வருகிறது. ஒரு ரூபாய் இட்லியால் ஓராயிரம் கோடி மக்களால் போற்றப்படுபவர்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
விடை:
மகளிர் நாள் விழா
எம்பள்ளிக் கலையரங்கில் 08.03.2020 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.
விழா நாள் : 08.03.2020
இடம் : பள்ளிக் கலையரங்கம்.
எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.
தலைமையாசிரியரின் வரவேற்பு:
இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று, நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிச்சித்திரம் வாயிலாக சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத் திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதழாளரின் சிறப்புரை:
‘காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும் இதழ்களே என்றால் மிகையில்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஒரு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். கல்வியில்லா பெண் களர் நிலம்’ என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை . ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். எனவே நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையுங்கள்; புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலகம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.
நன்றியுரை:
நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் ‘மோகனா’ நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.
Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:
Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers
Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF