13 Apr 2022

Samacheer Kalvi 10th Tamil Unit 3.5 Book Back

Samacheer Kalvi 10th Tamil Unit 3.5 – தொகாநிலைத் தொடர்கள் Book Back Answers:

Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் Unit 3.5 – தொகாநிலைத் தொடர்கள் Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 3.5 Answers below:

We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 3 Book Back Questions with Answer PDF:

For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide




10th Tamil Book Back Answers Unit 3.5 – தொகாநிலைத் தொடர்கள் Solution PDF:

Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF

Chapter 3.5 – தொகாநிலைத் தொடர்கள்

கற்பவை கற்றபின்

1.இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.
பத்தி செய்தி :
கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் எனச் சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள். திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.
விடை:
கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள்,அனைவரும் திரண்டனரா? – எழுவாய்த் தொடர்கள்
கதிரவா வா  – விளித்தொடர்
திருடன் திருடன் – அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக)
அழைத்தாள் சீதா – வினைமுற்றுத் தொடர்
நனிநலம் – உரிச்சொல் தொடர்
கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் – பெயரெச்சத் தொடர்கள்
வந்து போனாள் – வினையெச்சத் தொடர்
சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா – இரண்டாம் வேற்றுமைத்  தொகாநிலைத் தொடர்கள்
கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்கள்
காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி  – நான்காம் வேற்றுமைத்   தொகாநிலைத் தொடர்கள்

2.கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
விடை:

  • இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்
  • அவர் பாடகர் – எழுவாய்த் தொடர்
  • பாடுவது கேட்பது – கூட்டு வினையெச்சத் தொடர்
  • கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்
  • கேட்காத பாடல்கள் – எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
  • அடுக்கு அடுக்காக – அடுக்குத் தொடர்

3.வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
விடை:

  • பழகப் பழகப் பாலும் புளிக்கும் – அடுக்குத்தொடர்
  • வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் – பெயரெச்சத் தொடர்
  • மேடையில் நன்றாகப் பேசினான். – வினையெச்சத் தொடர்
  • வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்
  • அரிய கவிதைகளின் தொகுப்பு இது. – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

4. மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Respected ladies and gentlemen, I am Llangollen studying the tenth standard. I have come here to say a few words about our Tamil Culture. Sangam literature shows that Tamils were the best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the lifestyles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England, and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should proud of our culture. Thank you one and all.
விடை:

தமிழ்ப் பண்பாடு

மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!

5. பழமொழிகளை நிறைவு செய்க.

  • உப்பில்லாப் …………………………..
  • ஒரு பானைச் …………………………..
  • உப்பிட்டவரை …………………………..
  • விருந்தும் …………………………..
  • அளவுக்கு …………………………..

விடை:

  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.




6. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

சிலை – சீலை, தொடு – தோடு, மடு – மாடு, மலை – மாலை, வளி – வாளி, விடு – வீடு

விடை:

  • சிலை – சீலை : எ.கா: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.
  • தொடு – தோடு : காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது.
  • மடு – மாடு : மடுவில் (குட்டையில்) மாடு நீர்க் குடித்தது.
  • மலை – மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினேன்.
  • வளி – வாளி : வளியும் (காற்றும்) வாளியும் (அன்பும்) இல்லாமல் வாழ முடியாது.
  • விடு – வீடு : அகந்தையை விடு, வீடுபேறு (சொர்க்கம்) கிடைக்கும்.

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

அ) ஊண், ஊன்
ஆ) திணை, தினை
இ) அண்ணம், அன்னம்

விடை:

அ) ஊண், ஊன்
ஊண் – இரை, உண்டி, சோறு, உணவு, ஆன்மாவின் சுகதுக்கனுபவம்.
ஊன் – உடல், தசை, நிணம், மாமிசம், சரீரம்.

ஆ) திணை, தினை
திணை – இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள்.
தினை – ஒரு சாமை (தானியம்), சிறுமை.

இ) அண்ணம், அன்னம்
அண்ணம் – மேல்வாய், மேல் நாக்கு.
அன்னம் – கவரிமான், சோறு தானியம், பிரம்ம வாகனம்.

ஈ) வெல்லம், வெள்ளம்
வெல்லம் – கருப்பஞ்சாற்றுக்கட்டி.
வெள்ளம் – நீர்ப்பெருக்கு, கடல், கடலலை, நீர், ஈரம், மிகுதி, உண்மை .

7. பாடநூல் வினாக்கள்

1.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது…………………………….
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
விடை:
அ) வேற்றுமை உருபு

குறுவினா

1.‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
விடை:
‘சிரித்து பேசினார்’ என்பது, உவகை காரணமாக சிரித்து சிரித்து பேசினார்’ என அடுக்குத்தொடராகும்.

2.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?.
விடை:

  • பெயர்ப் பயனிலை –
  • வினை பயனிலை – சென்றார்
  • வினா பயனிலை – யார்?

சிறுவினா

1.‘கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!
இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
விடை:
‘கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்
மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்

Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:

Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers

Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *