15 Mar 2022

TNPSC Indian Economy – Source of Revenue in Tamil

TNPSC இந்தியப் பொருளாதாரம் -வருவாய் ஆதாரங்கள்:

இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.

Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:




மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product: GDP):

  • ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலைப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும்.
  • இதற்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால் இது சந்தைவிலையின் GDP என அழைக்கப்படுகிறது.

செலவு முறையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்

GDP=c+I+G + (x – M).

இதில் C = நுகர்வு பண்டங்கள்;

I = முதலீட்டு பண்டங்கள்,

G= அரசின் வாங்குதல்கள்;

{x – M) = நிகர ஏற்றுமதி (இது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம்.

 

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) (GNP):

  • மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும்.
  • இதில் நிகர வெளிநாட்டு வருமானமும (நிகர ஏற்றுமதி) சேர்க்கப்படும்.

சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.

 

நிகர தேசிய உற்பத்தி ( NNP at Market Prices ):

  • நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். GNPயிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.

NNP = GNP – தேய்மான கழிவு

தேய்மானத்தை மூலதன நுகர்வு கழிவு (Capital Consumption Allowance) என்றும் கூறலாம்.

 

காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP at Factor Cost):

  • NNP என்பது உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும். காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும்.
  • காரணி செலவில் நிகர தேசிய வருவாயை பெறுவதற்கு, சந்தை விலையில் NNPயின் பணமதிப்பிலிருந்து மறைமுக வரியை கழிக்க வேண்டும். மேலும் மானியங்களை கூட்ட வேண்டும்.

காரணிசெலவில் NNP= சந்தை விலையில்

NNP – மறைமுகவரி + மானியம்

 

தனிநபர் வருமானம் (Personal Income):

  • தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் ஆகும்.
  • அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும்.
  • தனிநபர் வருமானம் தேசியவருமானத்திற்கு சமமாக இருக்காது. ஏனெனில் மாற்று செலுத்துதல்கள் (Transfer Payment) தனிநபர் வருமானத்தோடு சேர்க்கப்படுகிறது.
  • அரசிடம் இருந்து கிடைத்த ஓய்வூதியம் (Pension) தனிநபர் வருமானத்துடன் சேர்க்கப்படுகிறது. எனவே, தேசிய வருவாயிலிருந்து பங்களிக்கப்படாத கார்பரேட் இலாபம் மற்றும் சமூக

பாதுகாப்புத்திட்டங்களில் உழைப்பாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றை கழித்துவிட்டு, மாற்று செலுத்துதல்களை கூட்டி தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.

தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் – (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்



செலவிடக்கூடிய வருமானம் (Disposable Income):

  • செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவிடக்கூடிய வருமானத்தை குறிக்கிறது.
  • தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளைக் (Eg. Income Tax) கழித்தால் கிடைப்பது செலவிடக்கூடிய வருமானம்.
  • இந்த வருமானம் தான் தனிநபர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும்.

செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் – நேர்முகவரிகள்

 

தலா வருமானம் (Per capita Income):

  • தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக்கிடைப்பது தலா வருமானம்.

தலாவருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை

 

பணம் செலுத்தப்படாத சேவைகள் (Unpaid services):

  • இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர்.
  • உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளையும் எந்தவித பண வருமானமும் இன்றியும் நட்பு, பாசம், அன்பு, மரியாதை போன்ற பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் வேலை செய்கிறார்கள்.
  • ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.

 

மூலதன இலாபம் (Capital Gains):

  • மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன இலாபம் கிடைக்கிறது.
  • தேசிய வருவாய் கணக்கீட்டில் மூலதன இலாபம் சேர்க்கப்படுவது இல்லை .

 

மாற்றுச் செலுத்துதல்கள் (Transfer Payments):

  • ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவைகள் அரசின் செலவுகள் ஆகும். ஆனால் இவைகளை தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை.
  • தேசியக்கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே.

 

தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting):

  • சமூகக் கணக்கிடுதல் மூலமாகவும் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. சமூகக் கணக்கிடுதல் முறையில் நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு மற்றும் இதுபோன்ற அமைப்புகளின் பரிமாற்றங்கள் பதியப்பட்டு இவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளும் கண்டறியப்படுகின்றன.
  • சமூகக் கணக்கிடுதலை தயாரிப்பது பொருளியல் அறிஞர்களுக்கு கொள்கைகளை உருவாக்க பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் இது பொருளாதார அமைப்பின் பல்வேறு துறைகளுக்கு இடையே உள்ள புள்ளியியல் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளை விளக்குகிறது.
  • மேலும் எதிர்கால பொருளாதார நிலையை துல்லியமாக கணிப்பதற்கும் உதவுகிறது.


TNPSC Indian Economy – Source of Revenue Questions and Answers in Tamil:

சரியான விடையை தெரிவு செய்க:

1. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

அ. தேசிய வருவாய்

ஆ. உள்நாட்டு வருமானம்

இ. தலை வீத வருமானம்

ஈ. சம்ப ளம்

2. முதன்மைதுறை என்பது

அ. தொழில்

ஆ. வியாபாரம்

இ.விவசாயம்

ஈ.கட்டடம் கட்டுதல்

3. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

அ. இரண்டு

ஆ. மூன்று

இ. ஐந்து

ஈ. நான்கு

4. எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

அ. வருவாய்

ஆ. வரி

இ. செலவு

ஈ. வருமானம்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

அ. செலவிடக்கூடிய வருமானம்

ஆ. தனிநபர் வருமானம்

இ. NNP

ஈ. GNP

6. துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது.

அ. கட்டடத்துறை

ஆ. விவசாயத் துறை

இ. பணித்துறை

ஈ. வங்கித் துறை

7. மூன்றாம் துறைஅழைக்கப்படுகிறது.____எனவும்

அ. பணிகள்

ஆ. வருமானம்

இ. தொழில்

ஈ.உற்பத்தி

8. ஒரு நாட்டின் _______செயலை தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.

அ. தொழில்

ஆ. விவசாயம்

இ. பொருளாதாரம்

ஈ. நுகர்வு

9. __________ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்.

அ. உற்பத்தி

ஆ. நாட்டின் மக்கள் தொகை

இ. செலவு

ஈ. CNP

10. GNP = ………+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.

அ. NNP

ஆ. NDP

இ. CDP

ஈ. தனிநபர் வருமானம்

11. NNP என்பது

a) Net National Product

b) National Net Product

c)National Net Provident

d). Net National Provident

12. மொத்த மதிப்பிலிருந்து —கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

அ. வருமானம்

ஆ. தேய்மானம்

இ. செலவு

ஈ. முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

13. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது

அ. ஏப்ரல் 1 முதல் மார்ச் 31

ஆ. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30

இ மார்ச் 1 முதல் மார்ச் 18

ஈ. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31

14. NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு –

அ. மொத்த தேசிய உற்பத்தி

ஆ. செலவிடக்கூடிய வருமானம்

இ. நிகர உள்நாட்டு உற்பத்தி

ஈ. தனிநபர் வருமானம்

15. உற்பத்திப் புள்ளியில் MPயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது

அ. காரணி செலவில் NNP

ஆ. சந்தை விலையில் NP

இ. காரணி செலவில் GNP

ஈ. தலைவீத வருமானம்

16. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது

அ. தனிநபர் வருமானம்

ஆ. தலைவீத வருமானம்

இ. பணவீக்க வீதம்

ஈ. செலவிடக்கூடிய வருமானம்

17. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ———- என அழைக்கப்படுகிறது

அ. பணவீக்க வீதம்

ஆ. செலவிடக்கூடிய வருமானம்

இ. CNP

ஈ. உண்மைத் தேசிய வருவாய்

18. கீழ்வருவனவற்றுள் எது ஒட்ட (Flow) கருத்துரு?

அ. சட்டைகளின் எண்ணிக்கை

ஆ. மொத்த சொத்து

இ. மாத வருமானம்

ஈ. பண அளிப்பு

19. POU என்பது ———-ன் குறியீடு

அ. பொருளாதார வளர்ச்சி

ஆ. பொருளாதார நலன்

இ. பொருளாதார முன்னேற்றம்

ஈ. பொருளாதார மேம்பாடு

20. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் ———-லிருந்து வருகிறது.

அ. தனியார் துறை

ஆ. உள்துறை

இ. பொதுத்துறை

ஈ. எதுவும் இல்லை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *