15 Mar 2022

TNPSC Indian Economy – Goods and Services Tax in Tamil

TNPSC இந்தியப் பொருளாதாரம் – சரக்கு மற்றும் சேவை வரி :

இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.

Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:




சரக்கு மற்றும் சேவை வரி

  • இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டது… சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மாரச் 29-ல் நிறைவேற்றப்பட்டு. 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொருமதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
  • சுருங்கக்கூறின் சரக்கு மற்றும் சேவை வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.
  • நாடு முழுவதற்குமான ஒரே மறைமுக வரியாக GST- உள்ளது.
  • GSTயின் கீழ், இறுதி விற்பனையின் மேல் சுமத்தப்படுகிற உரியாகும். மாநிலத்திற்குப்பட்ட விற்பனையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒருங்கிணைந்த GST விதிக்கப்படுகிறது.

Goods and Services Tax in Tamil

இட அடிப்படையிலானது

சரக்குகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, கர்நாடகாவில் இறுதியாக நுகர்வோருக்கு விற்கப்படுவதாக கொள்வோம். இந்த சூழ்நிலையில் முழு வரி வருவாயும் கர்நாடகாவிற்கே செல்லும் தமிழ்நாட்டிற்கல்ல. GST-ன் உள்ளடக்கங்கள்

GST மூன்று வகைப்படும். அவையாவன :

CGST, SGST மற்றும் IGST.

CGST: மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வருவிக்கப்படுவதாகும். (உம். மாநிலத்திற்குள் யூனியன் பிரதேசம்)


SGST: மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உம். மாநிலத்திற்குள் யூனியன் பிரதேசம்)

IGST: மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வருவிக்கப்படுவதாகும். (உம். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பொருள் விற்பனை)

Indian Economy - GST in Tamil

விற்பனை வரியின் இயல்பு, VAT மற்றும் GST:

  1. GST வரியானது சரக்கு மற்றும் சேவை விற்பனையில் உள்ள அடித்தள விளைவை நீக்கியது. இது பொருட்களுக்கான செலவில் நேரடி விளைவை ஏற்படுத்தியது. இது வரிக்கு வரி என்பதை நீக்கியதால் பொருட்களுக்கான செலவு குறைந்தது.
  2. VAT எனப்படுவது அடித்தள விளைவில்லாத பல்முனை வரியாகும்.
  3. GST என்பது அடித்தள விளைவில்லாத ஒரு முனை வரியாகும்.

GST-ன் நன்மைகள் :

  1. வரி மீதான வரி இம்முறையில் நீக்கப்படுவதால் பொருட்களுக்கான செலவு குறைகிறது. இது நேரிடையாக பொருட்களின் செலவில் பிரதிபலிக்கிறது.
  2. GST எனப்படுவது தொழில்நுட்ப ரீதியில் அமைந்ததாகும். பதிவு செய்தல், வரித் தாக்கல் செய்தல் கூடுதலாக செலுத்தியதை திரும்பப்பெருதல், கோரிய விளக்கங்களுக்கு பதிலளித்தல் போன்றவற்றை GST இகாணயத்தில் செய்யப்படுகிறது. இதனால் அனைத்து செயல்பாடுகளும் விரைவாக நடைபெறுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *