15 Mar 2022

TNPSC Indian Economy – Five-year plan models in Tamil

TNPSC இந்தியப் பொருளாதாரம் –  ஐந்தொண்டு திட்ட மொதிரிகள் :

இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.

Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:




இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள்

பொருளாதார திட்டமிடலின் நோக்கம் பொருளாதாரத் திட்டமிடலை வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதலாகும். ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் திட்டமிடலை வரையறுக்கப்பட்ட அளவிலான மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து [முன்னால் சோவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டுத் திட்டங்களைத் செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே(2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (National Institution for Transforming India) மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.

முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951-1956)

  • இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
  • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
  • இத்திட்டம்6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.

இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956-1961)

  • இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. கொண்டது
  • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.
  • இத்திட்டம்1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961-1966)

  • இத்திட்டம் “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
  • சீன – இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான6% ஐ அடைய இயலவில்லை .

திட்ட விடுமுறை காலம் (1966-1969)

  • இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
  • இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.


நான்காம் ஐந்தாண்டுத்திட்டம் (1969-1974)

  • இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
  • இத்திட்டம் அதன் இலக்கான7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (19741979)

  • இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
  • இத்திட்டத்திற்கான முன் வரைவுP.தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.

சுழல் திட்டம்

  • 1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980-1985)

  • இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
  • இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
  • இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985-1990)

  • இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல். ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார்துறையின் வெற்றியாக அமைந்தது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

 



ஆண்டுத் திட்டங்கள்

  • மைய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 – 91 மற்றும் 1991 – 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

  • இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
  • இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம் (1997-2002)

  • சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது
  • இத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம்6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002-2007)

  • இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
  • இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

பதினொன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007-2012)

  • இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”
  • இதன் வளர்ச்சி இலக்கு1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

பனிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012-2017)

  • இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
  • இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம். பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப் பலன்களைப் பெறலாம், என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் முறையை சோவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *